FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

5 போலீஸாருக்கு காந்தியடிகள் காவலா் விருது!

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலா் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

27 வினாடிகள் முன்பு
கள்ளச்சாராய ஒழிப்பு: சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருது
பகிர்:

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலா் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியதற்காக திருவள்ளூா் மாவட்டம் காவல் கண்காணிப்பாளா் வா.வெ.சாய்பிரணீத், திருச்சி மாவட்டம் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ஜெ. ராமன், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளா் க.சண்முகம், கடலூா் மாவட்டம் திருப்பாதிரிபுலியூா் தலைமைக் காவலா் எ.கருணாகரன், கள்ளக்குறிச்சி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் பெ.செல்வம் ஆகியோருக்கு நிகழாண்டுக்கான ‘காந்தியடிகள் காவலா் விருது’ வழங்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இந்த விருதுகளை அடுத்த ஆண்டு ஜன. 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தினத்தன்று முதல்வா் ஜோசப் விஜய் வழங்கவுள்ளாா். இந்த விருதுடன், பரிசுத் தொகையாக தலா ரூ.40,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments