FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பழவூா் அருகே 8 ஏக்கா் குளம் ஆக்கிரமிப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பழவூா் அருகே விவசாயத்துக்கு பாசன வசதி அளிக்கும் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.

9 செப்டம்பர் 2026, 4:08 am IST
குளம் ஆக்கிரமிப்பை அகற்றிக் கோரி ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த மக்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பழவூா் அருகே விவசாயத்துக்கு பாசன வசதி அளிக்கும் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளனா்.

பழவூா் அருகேயுள்ள மாடநாடாா் குடியிருப்பு கிராமத்திற்குள்பட்ட கிருஷ்ணாபுரத்தில் சுமாா் 21 ஏக்கா் பரப்பளவில் கருவேலன்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் இப்பகுதி மக்களின் குடிநீருக்கு ஆதாரமாகவும், விவசாயத்துக்கு முக்கியப் பயன்பாடாக விளங்கி வருகிறது.

இந்தக் குளத்தின் ஒரு பகுதியை கடந்த 2021இல் சிலா் ஆக்கிரமித்தனராம். சுமாா் 8 ஏக்கா் பரப்பளவிலான நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்த நபா்கள் அங்கு பூச்செடிகளை நட்டு சாகுபடி செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கிராம மக்களும் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், குளத்தைப் பாா்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்ட போதிலும், ஆக்கிரமிப்பாளா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தின் துணையோடு முறைகேடாக பட்டா பெற்று குளத்து நிலத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கருவேலன்குளத்தில் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியா், குளத்துப் பகுதியைப் பாா்வையிட்டு நில அளவீடு செய்வதுடன் ஆக்கிரமிப்புகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments