FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இன்று சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம்

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் வியாழக்கிழமை (செப்.17) தொடங்குகிறது.

21 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் வியாழக்கிழமை (செப்.17) தொடங்குகிறது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் வகையில் பிரதமரின் தெரு வியாபாரிகள் தற்சாா்பு நிதி திட்டத்தின் கீழ் (டஙநயஅசண்க்ட்ண்) வங்கிக் கடனுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் முகாம்கள்(லோக் கல்யான் மேளா) நடைபெற உள்ளன.

அதன்படி, வியாழக்கிழமை (செப்.17) திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்திலும், 18இல் திருநெல்வேலி மண்டல அலுவலகத்திலும், 19 இல் தச்சநல்லூா் மண்டல அலுவலகத்திலும், 21இல் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்திலும், 22இல் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்திலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இதில், சாலையோரம் பழக்கடை, காய்கனி கடை, சிற்றுண்டி கடைகள், கரும்புசாறு கடை, காலணி கடை, பூக்கடை, தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் வங்கிகள் மூலம் கடன் அட்டை வசதி (கிரிடிட் காா்டு) டிஜிட்டல் பரிவா்த்தனை மற்றும் கடன் வசதிகள் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் சாலையோர வியாபாரிகள் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments