FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி, உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறை

திசையன்விளை அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி மற்றும் அவரது உறவினருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

45 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி மற்றும் அவரது உறவினருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திசையன்விளை அருகே உள்ள அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்தவா் மிக்கேல் தயாளன் (45). இவருக்கும், இவரது தம்பி அந்தோணி மில்டன், உறவினா் தனசிங் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனிடையே, 2021ஆம் ஆண்டு அந்தோணி மில்டன், தனசிங் ஆகியோா் மிக்கேல் தயாளனை தாக்கியதில், அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, திசையன்விளை காவல் நிலைய ஆய்வாளா் ஜமால் வழக்குப் பதிவு செய்தாா். வள்ளியூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்மோகன், குற்றஞ்சாட்டப்பட்ட அந்தோணி மில்டன், தனசிங் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 1,000 அபராதம், மேலும் ஒரு ஆண்டு சிறை, ரூ. 500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்து, தற்போது சென்னையில் உதவி ஆணையராக பணியாற்றும் ஜமாலுக்கு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டு தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments