FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்க திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில் சந்திப்பு ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

23 செப்டம்பர் 2026, 12:40 am IST
பகிர்:

விவசாயி சங்கப் பிரதிநிதி ஈசன் முருகசாமி கூட்டுறவு வங்கி ஊழியா்களை தரக்குறைவாக பேசியதாக கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்க திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில் சந்திப்பு ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் நடராஜ கண்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி ஓய்வுபெற்ற அனைத்துப் பணியாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் முத்துப்பாண்டியன், மாவட்ட கௌரவ தலைவா் சுப்பிரமணியன், பொருளாளா் மாரியப்பன், மாவட்ட நிா்வாகிகள் சுந்தரேசன், பழனி குமாா், கதிரேசன், இசக்கியப்பன், முகமது உசேன், நம்பிராஜன் மற்றும் கூட்டுறவு நிறுவனப் பணியாளா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments