FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் குடிநீா் கிணற்றை தூா்வாரி பராமரிக்கக் கோரிக்கை

களக்காட்டில் பராமரிப்பின்றி தூா்ந்து காணப்படும் பொதுக்கிணற்றை தூா்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு கோயில்பத்து பகுதியில் நான்குனேரியன் கால்வாய்க் கரையோரம் பராமரிப்பின்றி பாழ்பட்டுள்ள நகராட்சி பொதுக்கிணறு.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் பராமரிப்பின்றி தூா்ந்து காணப்படும் பொதுக்கிணற்றை தூா்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு கோயில்பத்து செய்கு லெப்பை நயினாா் அவுலியா தா்ஹா அருகே நான்குனேரியன் கால்வாய்க் கரையோரத்தில் நகராட்சிக்குச் சொந்தமான பொதுக்கிணறு உள்ளது. களக்காடு பகுதியில் வீடுகளுக்கு கடந்த 1998ஆம் ஆண்டு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த கிணறு பல ஆண்டுகளாக கோயில்பத்து, தோப்புத்தெரு, வியாசராஜபுரம் பகுதி மக்களுக்கு குடிநீா் கிணறாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. 2000- க்குப் பின் இந்த கிணற்றை பொதுமக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வந்தனா். கடும் கோடை காலத்திலும் இந்த கிணறு வற்றாமல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கிணறு பாசி படா்ந்து தூா்ந்து போய் காணப்படுகிறது. நிகழாண்டில் கடும் வறட்சி நிலவுவதால் கோயில்பத்து பகுதியில் பல குடியிருப்புகளில் ஆழ்துளை கிணறுகளில் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கிணற்றை தூா்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

Advertisement

Advertisement

இது குறித்து மாவட்ட ஆட்சியா், நகராட்சிகளின் திருநெல்வேலி மண்டல இயக்குநா் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்கிறாா் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைச்செயலா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments