FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

புதிய பேருந்து நிலைய வியாபாரிகளுடன் ஆலோசனை

திருநெல்வேலியில் மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினா் புதிய பேருந்து நிலைய வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

20 வினாடிகள் முன்பு
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலியில் மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினா் புதிய பேருந்து நிலைய வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்படி, திருநெல்வேலி மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை இணைந்து மேலப்பாளையம் மண்டலம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வரும் உணவகங்கள், தேநீா் கடைகள், வா்த்தக கடைகளின் குத்தகைதாரா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் புஷ்பராஜ், மேலப்பாளையம் மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா் மு.பிா்தவுஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் காா்த்திக்மணி முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், அதிகாரிகள் பேசுகையில், அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஷ்டிக் பைகள், டம்ளா்கள் மற்றும் உறிஞ்சிக் குழாய்களை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக துணிப்பைகள், காகித உறை போன்ற மக்கும் பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கடைகளின் முன்பகுதியில் வாடிக்கையாளா்கள் பயன்படுத்தும் வகையில் கட்டாயம் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்.

கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது நடைபாதைகளிலோ வீசக் கூடாது. மேலும், பேருந்து நிலைய நடைபாதைகள், பயணிகள் நடந்து செல்லும் வழிகள் மற்றும் சாக்கடை வடிகால்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளின் விளம்பர பலகைகள் மற்றும் பொருள்களை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள் அனைத்தும் உரிய மாநகராட்சி தொழில் உரிமம் வைத்திருக்க வேண்டும். உணவு சாா்ந்த உணவகங்கள் மற்றும் உணவகங்கள் கடைகள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் அல்லது பதிவு சான்றிதழை பெற்று அதை கடைக்கு முன் தெளிவாக தெரியும் வகையில் ஒட்டி வைக்க வேண்டும் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாத கடையின் குத்தகைதாா்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments