போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை
போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சோ்ந்தவா் மாயாண்டி(45).
இவா், கடந்த 2024 ஆம் ஆண்டில் இரு சிறுமிகளிடம் பாலியல் ரீதியான குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்திருந்தனா்.
இவ்வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், மாயாண்டிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.