வள்ளியூா் அருகே பனை விதைகள் நடவு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்கள் அழகப்பபுரம் குளக்கரையில் பனை விதைகள் நடவுப் பணியில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்கள் அழகப்பபுரம் குளக்கரையில் பனை விதைகள் நடவுப் பணியில் ஈடுபட்டனா்.
இப்பள்ளி சாா்பில், வள்ளியம்மாள்புரம், அழகப்பபுரம் கிராமங்களில் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் சிறப்பு நிகழ்ச்சியாக, அழகப்பபுரம் குளக்கரையில் 200 பனை விதைகள் நடப்பட்டன.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ். மரகதவல்லி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஆசிரியா் எஸ். சிதம்பரநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். என்எஸ்எஸ் அலுவலா் ச. கதிரேசன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.