FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருச்செந்தூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

திருச்செந்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மற்றும் பேரணி நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருச்செந்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மற்றும் பேரணி நடைபெற்றது. 
வ.உ.சி. திடலில் தொடங்கிய இப்பேரணிக்கு, கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசு தலைமை வகித்தார். பயிற்சி சார்-ஆட்சியர் அனு கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார்.
இதில், கல்லூரி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, ரதவீதிகள் வழியாக வலம் வந்தனர்.
நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளர் வ.கி.தீபு, வட்டாட்சியர் தில்லைபாண்டி, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் ரதிகலா, திருக்கோயில் காவல் ஆய்வாளர் ஷீஜாராணி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ல.நந்தக்குமார், ஆதித்தனார் கல்லூரி தேசிய தரைப்படை அலுவலர் சிவமுருகன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சாந்தா, சாலைப் பாதுகாப்பு படை அலுவலர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments