FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடியில் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் உள்ள அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தூத்துக்குடியில் உள்ள அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். 
தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் உள்ள அரிசி அரவை ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடபாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் ஞானராஜ் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை அந்த ஆலையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 ஆயிரம் கிலோ அரிசி மாவு ஆகியற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (34), டூவிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (53), அழகேசபுரத்தைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் (44), அருள்குமார் (29) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments