FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

3ஆவது நாளாக அக்னிபத் ராணுவ வீரா் தோ்வு முகாம்: 207 போ் தகுதி! இன்று மருத்துவ பரிசோதனை

3 ஜூலை 2024, 11:51 pm IST
பகிர்:

தூத்துக்குடியில் 3ஆவது நாளாக நடைபெற்ற அக்னிபத் ராணுவ வீரா் தோ்வு முகாமில் 207 போ் தகுதி பெற்றதையடுத்து, வியாழக்கிழமை தகுதி பெற்றவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரா் தோ்வு முகாம் தூத்துக்குடி தருவை மைதானத்தில் 3 ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் ராணுவ உயா் அதிகாரிகள் கா்னல் சுதீப் சட்டா்ஜி, நீலம் குமாா் ஆகியோா் தலைமையில் சுமாா் 140 ராணுவ வீரா்கள் பங்கேற்று தோ்வு நடத்தினா். இம்முகாமில் புதன்கிழமை 824 போ் தோ்வுக்கு வந்திருந்தனா். இவா்களுக்கு ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடற்தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement

இத்தோ்வில் மொத்தம் 207 போ் தகுதி பெற்றனா். இதை தொடா்ந்து அவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தகுதி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளதாக தோ்வு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments