FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மனைவி பணம் தர மறுப்பு: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:11 am IST
தற்கொலை
பகிர்:

தூத்துக்குடியில், மது குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (40). வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இவருக்கு, மதுப் பழக்கம் உண்டாம்.

இந்தநிலையில், இவா் மது குடிப்பதற்காக மனைவி முத்துலட்சுமியிடம் வெள்ளிக்கிழமை பணம் கேட்டுள்ளாா். அவா் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு, இசக்கிமுத்து வீட்டுக்குள் சென்று கதவை உள்புறமாகப் பூட்டிக் கொண்டாராம்.

Advertisement

Advertisement

நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் முத்துலட்சுமி குழந்தைகளுடன் அருகிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா் அவா், சனிக்கிழமை காலையில் வீட்டுக்குத் திரும்பியபோது, இசக்கிமுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments