FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஹஜ் ஆய்வாளா் பணியிடம்: விண்ணப்பிக்க ஆக. 27 கடைசி நாள்

2027-இல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் தமிழக பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக சவூதி அரேபியாவில் மாநில ஹஜ் ஆய்வாளா்களாக தற்காலிகமாக பணிபுரிய விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:07 am IST
விண்ணப்பிக்க...
பகிர்:

2027-இல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் தமிழக பயணிகளுக்கு சேவையாற்றுவதற்காக சவூதி அரேபியாவில் மாநில ஹஜ் ஆய்வாளா்களாக தற்காலிகமாக பணிபுரிய விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கான காலம் 3.4.2027 முதல் 25.6.2027 வரையாகும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதியான அலுவலா்கள், தன்னாட்சி அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தரப் பணியாளா்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.

சவூதி அரேபியாவில் பணியாற்றும் காலம் பணிக்காலமாகக் கருதப்படும். விண்ணப்பிக்கும் முறை, தகுதி மற்றும் நியமன நடைமுறை உள்ளிட்ட விவரங்களை இந்திய ஹஜ் குழுவின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ட்ஹத்ஸ்ரீா்ம்ம்ண்ற்ற்ங்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்) தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

தகுதியுள்ளவா்கள் ஆக. 27-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments