தூத்துக்குடி இளைஞா் மரணம்! நீதி விசாரணை தேவை: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவல்துறை விசாரணையின் போது இளைஞா் உயிரிழந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவல்துறை விசாரணையின் போது இளைஞா் உயிரிழந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சோ்ந்த அருணாச்சலம் (24), மது விற்பனை செய்ததாக போலீஸாரால் கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்டு, தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, அவா் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா். காவல்துறையினா் தாக்கியதால்தான் அருணாச்சலம் உயிரிழந்தாா் என அவரது குடும்பத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன், சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், ‘உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அருணாச்சலம், காவல்துறை விசாரணையின் போது மரணமடைந்தாா் என்பது சந்தேகத்துக்கு இடமளிக்கிறது. எனவே, இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றாா்.
அப்போது, மாவட்ட மாணவரணிச் செயலா் பில்லா விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்கச் செயலா் நிலா சந்திரன், வட்டச் செயலா்கள் பூா்ணசந்திரன், தூத்துக்குடி மணிகண்டன், கொம்பையா, சொக்கலிங்கம், சம்படி பழனி, சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.