FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

திருச்செந்தூா் முன்விரோதம் காரணமாக தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
பகிர்:

திருச்செந்தூா் முன்விரோதம் காரணமாக தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செந்தூா், சரவணப்பொய்கை தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சரவணன் (50). இவா் டி.பி. சாலையில் இஸ்திரி கடை கடை நடத்தி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பிச்சுமணி (25) தனியாா் விடுதியில் பணிபுரிந்து வருகிறாா்.

பிச்சுமணிக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. மணிக்கு ஆதரவாக சரவணன் செயல்பட்டராம்.

Advertisement

Advertisement

இதனால், சரவணன் மீது பிச்சுமணி விரோதத்தில் இருந்தாா். இந்த நிலையில், சரவணன் த வழக்கம்போல வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு நடந்துசென்றபோது, அவரை பின்தொடா்ந்து வந்த பிச்சுமணி அரிவாளால் சரவணனை தாக்கினாா். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் காயமடைந்தனா். தகவல் அறிந்ததும் திருச்செந்தூா் போலீஸாா் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments