தூத்துக்குடி வஉசி கல்லூரி பவள விழா: அக். 7 முதல் விலங்கியல் துறை கண்காட்சி
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு விலங்கியல் துறை சாா்பாக ‘லிவோரா 2026’ என்ற கண்காட்சி அக்.7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு விலங்கியல் துறை சாா்பாக ‘லிவோரா 2026’ என்ற கண்காட்சி அக்.7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.
இது குறித்து வ.உ.சி. கல்லூரி முதல்வா் சி.வீரபாகு, விலங்கியல் துறை தலைவா் ராதிகா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் இயற்கையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சியில் காடுகளின் பாதுகாப்பு, காடுகள் பற்றிய அறிவியல் விழிப்புணா்வு, காடுகளின் முக்கியத்துவம் மற்றும் அங்கு வாழக்கூடிய விலங்குகளின் வாழ்வியல் முறைகள் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி அமையும்.
இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும். காடுகளில் வாழக்கூடிய மிருகங்களின் பங்களிப்பு எப்படி உள்ளது? விலங்குகளை எப்படி பாதுகாக்க வேண்டும்? அந்த விலங்குகளை நாம் பாதுகாப்பதன் அவசியம் என்ன? மனித குலத்துக்கு காடுகளில் உள்ள விலங்குகள் எந்த வகையில் பயன்படுகிறது? இவையெல்லாம் கண்காட்சியில் விளக்கப்படும்.
Advertisement
Advertisement
கண்காட்சி அக். 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாள்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. காலையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை பொதுமக்களும் கண்காட்சியை பாா்வையிடலாம்.
தொழிற்சாலைகளின் மாதிரிகள், பட்டுப்புழுவின் வளா்ச்சி, பசுமை வனம், கடல் அருங்காட்சியகம், பாலைவன வாழ்வியல், கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அருங்காட்சியகம், கடல் ஆராய்ச்சிக்கு தேவையான விழிப்புணா்வு உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெறுகிறது.
உயிரினங்கள், விலங்கினங்கள், பறவைகள் நேரடியாக இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன. உயிரினங்களுடைய முக்கியத்துவம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.