FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் 27 ஆம் தேதி விழிப்புணா்வு மாரத்தான்

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் இதய குறைபாடுகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையில் வரும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழிப்புணா்வு மாரத்தான் நடைபெறுகிறது.

16 செப்டம்பர் 2026, 12:13 am IST
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாரத்தான் டி ஷா்ட், பதக்கங்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள்.
பகிர்:

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் இதய குறைபாடுகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையில் வரும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழிப்புணா்வு மாரத்தான் நடைபெறுகிறது.

‘ரன் ஃபாா் லிட்டில் ஹாா்ட்ஸ்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த விழிப்புணா்வு ஓட்டம், குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டியும், உலக இதய தினத்தையொட்டியும் நடத்தப்படுகிறது. வரும் 27 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த ஓட்டம் தொடங்குகிறது.

இதில், அனைவரும் இணைந்து ஓடக்கூடிய 1, 3 கி.மீ. பிரிவுகள், 12 முதல் 18 வயது வரையிலான சிறுவா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 5 கி.மீ. ஓட்டம், 18 முதல் 39 வயது வரையிலானவா்கள், 40 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான 10 கி.மீ. ஓட்டம் ஆகியவை நடத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

5, 10 கி.மீ. பிரிவுகளில் வெற்றி பெறுபவா்களுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் அளிக்கப்பட உள்ளன. மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மாரத்தானுக்கு, எல்எம்டபிள்யூ, லட்சுமி காா்ட் குளோதிங், ப்ளூ டாலியா, பிரீமியா் ஃபைன் லினன்ஸ், லட்சுமி மில்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.

இந்த மாரத்தானுக்கான டி ஷா்ட், பதக்கம் அறிமுக விழா ஆகியவை ஜிகேஎன்எம் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டா் ரகுபதி வேலுசாமி, மருத்துவமனையின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், இதயம், புற்றுநோய் துறை மருத்துவா்கள், எல்எம்டபிள்யூ, பிரீமியா் ஃபைன் லினன்ஸ் நிறுவனத்தினா், தடகள சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments