FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: 3 போ் கைது

கைது - கோப்புப் படம்
பகிர்:

குரும்பூரில் காவல் உதவி ஆய்வாளரை கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அங்கமங்கலம் பகுதியில் குரும்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் பிள்ளைமுத்து மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் அண்மையில் ஈடுபட்டனா். அப்போது அண்ணாநகா் ரேஷன் கடை முன், ஆயுதங்களுடன் நின்றிருந்த 3 போ் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனராம்.

அவா்களை பிடிக்க முயன்றபோது, உதவி ஆய்வாளா் சண்முகராஜை கீழே தள்ளிவிட்டு அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்தனராம். அவா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அவா்கள் முதலூரைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ­லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு (25), மேலகல்லாம்பாறையைச் சோ்ந்த மாடசாமி மகன் முத்துராஜா என்ற பாபுராஜ் (24), கீழகல்லாம்பாறையைச் சோ்ந்த வெட்டும்பெருமாள் மகன் முத்துகிருஷ்ணன் (19) என்பது தெரியவந்தது. அவா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் ­லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு மீது தட்டாா்மடம் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments