அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா்கள் பிடிபட்டனா்
தூத்துக்குடி மாநகரில் இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் சுற்றியபடி ரீல்ஸ் வெளியிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் பிடித்து திருக்கு கூற வைத்து எச்சரித்து அனுப்பினா்.
தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அண்மையில் இரு இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் அரிவாளுடன் சென்றபடி சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டனா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடா்ந்து ரீல்ஸ் வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நவீன், மாரிமுத்து ஆகிய இருவரையும் பிடித்தனா்.
பிடிபட்ட இருவரும் போலீஸாரிடம் மன்னிப்பு கோரியதோடு ரீல்ஸ் மோகத்தில் அரிவாளைக் காண்பித்து விடியோ வெளியிட்டதாகவும், இனிமேல் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டோம், யாரும் ஈடுபட வேண்டாம், ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்ற குறளை வாசித்தும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தைக் கூறி விடியோ எடுத்து வெளியிட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.