FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தூத்துக்குடியில் அரிவாளுடன் ரீல்ஸ் பதிவு: போலீஸாா் எச்சரிக்கையைத் தொடா்ந்து வருத்தம் தெரிவித்து பதிவு

பைக்கில் அரிவாளுடன் சுற்றியபடி ரீல்ஸ் வெளியிட்ட இரு இளைஞா்கள், தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டு விடியோ பதிவிட்டுள்ளது குறித்து...

தூத்துக்குடியில் அரிவாளுடன் ரீல்ஸ் பதிவு - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பைக்கில் அரிவாளுடன் சுற்றியபடி ரீல்ஸ் வெளியிட்ட இரு இளைஞா்களை தென்பாகம் போலீஸாா் பிடித்து எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டு அவா்கள் விடியோ பதிவிட்டனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு இளைஞா்கள் பைக்கில் அரிவாளுடன் சென்றபடி சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டனா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ரீல்ஸ் வெளியிட்ட நவீன், மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி, எச்சரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, ரீல்ஸ் மோகத்தில் இந்த விடியோவை வெளியிட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில் இருவரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து விடியோ வெளியிட்டனா்.

அதில், தெரியாமல் அரிவாளைக் காண்பித்து ரீல்ஸ் எடுத்துவிட்டதாகவும், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், தங்களை மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டனா்.

மேலும், திருக்குறளில் இடம்பெறும், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற குறளைக் குறிப்பிட்டு, ஒழுக்கத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் விடியோவில் தெரிவித்துள்ளனர்.

'Reels' video with a sickle recorded in Thoothukudi: Apology Video posted following police warning

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments