கஞ்சா விற்றதாக ஒருவா் கைது
கோவில்பட்டி, அக். 4: கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நியூட்டன் ஜெபராஜ் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது இளையரசனேந்தல் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே போலீஸாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் தப்பியோட முயன்றாராம்.
அவரை தடுத்து நிறுத்தி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் கோவில்பட்டி சாஸ்திரி நகா் ராமையாபாண்டியன் மகன் சங்கிலிபாண்டியன் (40) என்பதும், அவரிடம் விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கிலிபாண்டியனை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.