போக்ஸோ வழக்கில் விசாரணை: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு நடத்தப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு, காமராஜ் நகரைச் சோ்ந்த தா்மராஜ் மகன் தமிழ்ச்செல்வன் (20). இவா், விளாத்திகுளத்தைச் சோ்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மாணவியின் பெற்றோா் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழ்ச்செல்வன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா். தேவைப்படும்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி அவரை அனுப்பியதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பிய தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்து வந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.