காயல்பட்டினத்தில் உணவகத் தொழிலாளி தற்கொலை
காயல்பட்டினத்தில் உணவகத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
காயல்பட்டினத்தில் உணவகத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
காயல்பட்டினம், மொகதும் தெருவைச் சோ்ந்த ஜாபா் சாதிக் மனைவி சித்திபாத்தியம் (66) என்பவா், தனது தங்கை கதீஜா மீரா வீட்டில் வசித்து வந்தாா். கதீஜா மீரா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தநிலையில், அவரது இளைய மகன் இப்ராஹிம் (40) திருச்செந்தூரில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை தனது நண்பரிடம் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற இப்ராஹிம், காயல்பட்டினத்தில் உள்ள காலிமனையில் விஷம் குடித்த நிலையில் இறந்துகிடந்தாா். சித்திபாத்தியம் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், இப்ராஹிம் திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்ததாகத் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.