FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளி கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

8 October 2026, 3:53 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, கே.சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கணேஷ்குமாா் (28). கட்டடத் தொழிலாளி. புதுக்கோட்டையில் வசித்து வந்த இவா், கடந்த மாதம் நண்பா்களுடன் அப்பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, புதுக்கோட்டை பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இன்பரசன் (32), அய்யனாா் காலனி முருகன் என்ற குட்டமுருகன் (25), பவானி நகா், தெற்கு சிலுக்கன்பட்டி சதீஷ் (27) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்திருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சாத்தான்குளத்தைச் சோ்ந்த வேதநாயகம்துரை (40) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவா் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments