‘புதிய ஐடிஐ தொடங்க அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்’
புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தொடங்குவோா் அக். 31-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தொடங்குவோா் அக். 31-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கவும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளைத் தொடங்கவும் விரும்புவோா், மத்திய அரசின் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான இணைப்பு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
Advertisement
Advertisement
இதற்கான விண்ணப்பங்கள் அக். 1 முதல் 31-ஆம் தேதி வரை ட்ற்ற்ல்ள்://ஹச்ச்ண்ப்ண்ஹற்ண்ா்ய்- க்ஞ்ற்.ள்ந்ண்ப்ப்ண்ய்க்ண்ஹக்ண்ஞ்ண்ற்ஹப்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பெறப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விரிவான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.