சாத்தான்குளம் கல்லூரியில் விழிப்புணா்வுப் போட்டிகள்
வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் சுசீலா பாய்.
சாத்தான்குளம் அரசு கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெற்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்ட வாரம் அக். 6 முதல் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் சுசீலா பாய், மண்டல துணை வட்டாட்சியா் சாமிநாதன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளா் அசோக், பேராசிரியா்கள் உமா பாரதி, ஷீபா, மரிய செல்வி, சண்முகராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.