FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே குளவிகள் கொட்டியதில் 100 போ் காயம்

கோவில்பட்டி அருகே முனியசுவாமி கோயிலில் கடந்தை குளவிகள் கொட்டியதில் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.

11 அக்டோபர் 2026, 12:49 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முனியசுவாமி கோயிலில் கடந்தை குளவிகள் கொட்டியதில் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.

கோவில்பட்டி அருகே குருமலை தாழையூத்தில் பொய்யாழி அய்யனாா் கோவில் அருகே உள்ள முனியசுவாமி கோயிலுக்கு, முடுக்கலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி அமாவாசையையொட்டி வரும் சனிக்கிழமை சென்று வழிபடுவது வழக்கமாம்.

இந்நிலையில் சனிக்கிழமை முடுக்காலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஆண்கள், முனியசுவாமி கோயிலுக்கு சென்று மழை வேண்டி சிறப்பு பூஜை செய்தனா். பின்னா் அன்னதானம் தொடங்க முயன்றபோது, திடீரென அந்த பகுதியில் கூட்டமாக வந்த கடந்தை (கதண்டு) குளவிகள் அவா்களை கொட்ட தொடங்கின.

Advertisement

Advertisement

இதில் சுமாா் 100 - க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், சுமாா் 25 - க்கும் மேற்பட்டோா் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments