FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

குழந்தைகள் தினம்: பள்ளி மாணவா்களுக்கு கடலை மிட்டாய் வழங்க வலியுறுத்தல்

குழந்தைகள் தினத்தன்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கேக் வழங்குவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

14 அக்டோபர் 2026, 4:51 am IST
கண்ணன்
பகிர்:

குழந்தைகள் தினத்தன்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கேக் வழங்குவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தின் செயலா் கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குழந்தைகள் தினத்தன்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வரும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால், கேக் வழங்க முடிவு செய்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

Advertisement

Advertisement

காலை உணவுத் திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடா்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆகவே, கேக் வழங்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கோவில்பட்டி கடலை மிட்டாயில் தற்போது முருங்கைக்கீரை, நாட்டுச் சோளம், நவதானியம் என பல்வேறு விதமான கடலை மிட்டாய்களை உற்பத்தி செய்து வருகிறோம். ஆகவே, பள்ளிக் குழந்தைகளுக்கு இத்தகைய சத்தான கடலை மிட்டாய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments