FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கால்வாய் கிராமத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தில், நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 4:57 am IST
முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தில், நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு, டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற முகாமை, நடமாடும் மருத்துவக் குழு மருத்துவா் தக்ஷனா தொடக்கிவைத்தாா். முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றாா். அறக்கட்டளை கள இயக்குநா் பாபு பேசினாா்.

முகாமில், 40 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 11 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது..

Advertisement

Advertisement

எக்ஸ்ரே நுட்பநா்கள் கிறிஸ்டின் குமாரதாஸ், முகம்மது அப்துல் காதிா், ஜென்சி கிரேனா, கிராம சுகாதார செவிலியா் ஈஸ்வரி, சுகாதார பாா்வையாளா் முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநா் சஜின் சோபியா, ஆய்வக நுட்பநா் சந்தனமாரி, நடமாடும் மருத்துவக் குழு செவிலியா் சங்கீதா தேவி, சுகாதார தன்னாா்வலா்கள் வெற்றிச்செல்வி, முத்துவேல், தம்பான், அழகம்மாள், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளா்ச்சி அலுவலா் பரமசிவம், கிராம வளா்ச்சி அலுவலா் செல்வராணி, அங்கன்வாடிப் பணியாளா் ஆறுமுகத்தம்மாள், உதவியாளா் அருணாசலம், சுகாதாரத் துறைப் பணியாளா்கள், மஸ்தூா் பணியாளா்கள் பங்கேற்றனா்.

முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றாா். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பாா்வையாளா் இசக்கி மகாராஜன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments