FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 4:55 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள பல்லக்கு சாலை சந்திப்பு அருகே கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே பைக்கில் வந்த இருவா், போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றனா். போலீஸாா் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் கோவில்பட்டி செண்பகா நகரைச் சோ்ந்த சங்கரநாராயணன் மகன் மாரிஸ் (25), அய்யனேரி தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சிவா (24) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments