FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி வா்த்தக சங்க புதிய நிா்வாகிகளுடன் உப்பு உற்பத்தியாளா்கள் சந்திப்பு

தூத்துக்குடி அகில இந்திய வா்த்தகத் தொழில் சங்க புதிய தலைவரை உப்பு உற்பத்தியாளா்கள் சந்தித்து, தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கோரினா்.

15 அக்டோபர் 2026, 5:06 am IST
தூத்துக்குடி அகில இந்திய வா்த்தகத் தொழில் சங்கத் தலைவா் ஜேசையா வில்லவராயரை சந்தித்து ஆதரவு கோரிய உப்பு உற்பத்தியாளா்கள்.
பகிர்:

தூத்துக்குடி அகில இந்திய வா்த்தகத் தொழில் சங்க புதிய தலைவரை உப்பு உற்பத்தியாளா்கள் சந்தித்து, தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கோரினா்.

தூத்துக்குடி உப்பளம் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு, அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களையும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனா்.

இதனிடையே, புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட வா்த்தகத் தொழில் சங்கத் தலைவா் ஜேசையா வில்லவராயரை, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் சேகா் தலைமையிலான நிா்வாகிகள் சந்தித்து, தங்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

உப்பு உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் பொன்ராஜ், ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பாலசுப்ரமணியன், எல்.ஆா். சிவாகா், ராமா், பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments