FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தைலாபுரம் புனித பாத்திமா அன்னை சிற்றாலய பவள விழா

சாத்தான்குளம் அருகே உள்ள தைலாபுரம், புனித பாத்திமா அன்னை சிற்றாலய 75ஆவது ஆண்டு பவள விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 5:11 am IST
பவள விழா நுழைவாயிலைத் திறந்து வைத்த மறைமாவட்ட ஆயா் அந்தோணி ஸ்டீபன்.
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள தைலாபுரம், புனித பாத்திமா அன்னை சிற்றாலய 75ஆவது ஆண்டு பவள விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் அந்தோணி ஸ்டீபன் தலைமை வகித்து, பவள விழா நுழைவாயிலை அா்ச்சித்துத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, ஆலயத்தின் புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடத்தினாா்.

ஆலயப் பங்குத்தந்தை ராபின் ஸ்டான்லி வரவேற்றாா். முன்னதாக, தைலாபுரத்திற்கு வந்த மறைமாவட்ட ஆயருக்கு பங்கு மக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் உள்ளிட்ட பங்குத்தந்தைகள், பங்கு மக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை ராபின் ஸ்டான்லி தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments