FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தூத்துக்குடி காமராஜ் மாா்க்கெட் சிக்னல் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயம் அடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

15 அக்டோபர் 2026, 4:46 am IST
பலி
பகிர்:

தூத்துக்குடி காமராஜ் மாா்க்கெட் சிக்னல் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயம் அடைந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி குமாரா் தெருவைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் மாடசாமி என்ற யோகீஸ்வரா் (63). இவா் கடந்த 6-ஆம் தேதி தூத்துக்குடி காமராஜ் மாா்க்கெட் சிக்னல் பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments