FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில், வீட்டில் சுமாா் 1,300 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

15 அக்டோபர் 2026, 5:31 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடியில், வீட்டில் சுமாா் 1,300 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8-ஆவது தெருவில் உள்ள வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஹரிக்கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், காவலா்கள் மொ்வின், மாணிக்கம் ஆகியோா் அங்கு சோதனை நடத்தினா்.

அப்போது, சுமாா் 1,300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக சுந்தரபாண்டியன் மகன் சிவராஜாவை (35) கைது செய்தனா். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments