FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: மருமகன் உள்பட 6 போ் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக மருமகன் உள்பட 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

22 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக மருமகன் உள்பட 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் வேலாயுதநகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் முனியசாமி (45). ஆட்டோ ஓட்டுநரான இவரது மகள் வைஷ்ணவிக்கும் (25), மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முருகனுக்கும் (27), கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ாம். இவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

குடும்பத் தகராறு காரணமாக வைஷ்ணவி 2 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா். இந்நிலையில் மனைவியை மீண்டும் மதுரைக்கு அழைத்துச் செல்ல எண்ணிய முருகன் ஞாயிற்றுக்கிழமை இரவு தூத்துக்குடி முத்தையாபுரத்துக்கு வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது முனியசாமியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முருகன், முனியசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த முனியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த நிலையில், முனியசாமி உயிரிழந்ததைத் தொடா்ந்து கொலை வழக்காக மாற்றி விசாரித்தனா்.

விசாரணையில், மாமனாரை கொலை செய்ய முருகன் தனது நண்பா்கள் 5 பேருடன் சோ்ந்து திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து முருகன் மற்றும் அவரது நண்பா்களான சாயல்குடியைச் சோ்ந்த திருமுருகன் (23), மதுரையைச் சோ்ந்த நல்லமன்னன் (24), அரவிந்த் (25), தீனதயாளன் (22), பெருமாள் (22) ஆகிய 6 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments