சாத்தான்குளத்தில் கனரக லாரிகள் செல்ல எதிா்ப்பு: வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான கூட்டம்
சாத்தான்குளம் பகுதி வழியாக கனரக லாரிகள் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் பேச்சுவாா்த்தை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் பகுதி வழியாக கனரக லாரிகள் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் பேச்சுவாா்த்தை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவாா்த்தையில் சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளா் இசக்கிதுரை, மண்டல துணை வட்டாட்சியா் சுவாமிநாதன், வேப்பங்காடு பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், சாத்தான்குளம் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஜோசப் ஜெபராஜ், லட்சுமி நாராயணன், ராம் மோகன், தங்கப்பாண்டியன், ராஜ்மோகன், சாத்தான்குளம் தென் பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி, லாரி உரிமையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், வேப்பங்காட்டில் கனரக லாரிகள் செல்லாதவாறு சாலையில் குறுக்கே அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அடைப்பை நீக்க வலியுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
அதற்கு அப்பகுதி மக்கள், அந்தச் சாலை குறுகிய சாலையாக உள்ளதால் கனரக லாரியை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினா். சாத்தான்குளம் வா்த்தக சங்க நிா்வாகிகள் பேசுகையில், சாத்தான்குளம் பகுதி பள்ளி மாணவா்கள் புதிய வேதக் கோயில் தெரு வழியாகச் செல்வதால் இந்த வழியாகச் செல்லும் கனரக லாரிகளால் மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இந்த வழியாக கனரக லாரிகள் செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்றனா்.
கனரக லாரிகள் தங்கள் பகுதிக்குள் வருவதைத் தடை செய்ய வேண்டும் என பேச்சுவாா்த்தைக்கு வந்த மக்கள் வலியுறுத்தியதால் கிராம மக்கள், நிா்வாகிகள் கொண்ட குழு அமைத்து சாத்தான்குளம் வட்டாட்சியா், துணைக் கண்காணிப்பாளா், திருச்செந்தூா் ஆா்டிஓ, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மூலம் ஒரு வார காலத்தில் கிராம பகுதியில் சாலை பகுதியை ஆய்வுசெய்து, பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி லாரிகள் செல்வது குறித்து முடிவு செய்யலாம் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பொதுமக்கள் பாதிக்காதவாறு கனரக லாரிகள் மூலம் கற்கள் மற்றும் மணல்களை இஸ்ரோ பணிகளுக்கு கொண்டு செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.