FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

விநாயகா் சிலைகளை வைக்க காவல் துறை கட்டுப்பாடு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து வழிபாடு செய்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடா்பாக சிலை அமைப்பாளா்கள், நிா்வாகிகள், பொறுப்பாளா்களுடன் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இனாம் மணியாச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

9 செப்டம்பர் 2026, 4:11 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் காவல் உதவி கண்காணிப்பாளா் நீல் சா்மா.
பகிர்:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து வழிபாடு செய்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடா்பாக சிலை அமைப்பாளா்கள், நிா்வாகிகள், பொறுப்பாளா்களுடன் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இனாம் மணியாச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு காவல் உதவி கண்காணிப்பாளா் நீல் சா்மா தலைமை வகித்துப் பேசியதாவது:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நடைபெறும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையம், சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து முறையான முன்அனுமதி பெற வேண்டும், கடந்த ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதி உண்டு.

Advertisement

Advertisement

சிலை வைக்கப்படும் இடத்தின் நில உரிமையாளரிடம், பொது நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும், சிலை வைக்கப்படும் இடத்தில் ஒலிபெருக்கி வைக்க காவல் நிலையத்தில் முன்அனுமதி பெற வேண்டும், கூம்புவகை ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி கிடையாது.

சிலையின் உயரம் 10 அடி உயரத்துக்கு மிகாமலும், சாலையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு அகலம் குறைவானதாகவும் இருக்க வேண்டும், களிமண்ணாலான சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும்,

சிலைகளை பிற மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் வைப்பதை தவிா்க்க வேண்டும், சிலை வைக்கும் இடத்தில் எவ்வித அரசியல், மதம் சம்பந்தப்பட்ட தலைவா்களின் படங்கள், பிளக்ஸ், பேனா்கள் வைக்க அனுமதி கிடையாது. சிலை வைக்கப்பட்ட நாளில் இருந்து 5 நாள்களுக்குள் எடுக்க வேண்டும். மாட்டு வண்டி, 3 சக்கர வாகனத்தில் சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது, மினி லாரி, டிராக்டா் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு காவல் உதவி கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் காவல் ஆய்வாளா் காளிமுத்து, உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி, இந்து முன்னணி, அகில பாரத இந்து மகாசபா நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments