FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் - லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் நின்றிருந்த பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

16 செப்டம்பர் 2026, 1:29 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நின்றிருந்த பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே புளியங்குளம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் அ. பரமசிவன் (53). தோட்டிலோவன்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்துவந்த இவா், திங்கள்கிழமை இரவு பணி முடிந்து செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

இளையரசனேந்தல் சாலையில் புது அப்பனேரி ராதாகிருஷ்ணன் நகா் நிறுத்தம் அருகே அரசுப் பேருந்து பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்தததால், பரமசிவன் பேருந்தின் பின்புறம் பைக்கில் நின்றிருந்தாா். அப்போது, பைக்கின் பின்புறம் லாரி மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கேரள மாநிலத்தைச் சோ்ந்த தா. விகாஸ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments