FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சா் ஆய்வு

எட்டயபுரத்தில் உள்ள தமிழக அரசின் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் கைத்தறி, துணி நூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

16 செப்டம்பர் 2026, 1:36 am IST
அமைச்சர் விஜய் பாலாஜி - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள தமிழக அரசின் பாரதி கூட்டுறவு நூற்பாலையில் கைத்தறி, துணி நூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ம. விஜய் பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ஆலையின் செயல்பாடுகள், இயந்திரங்களின் உற்பத்தித் திறன் ஆகியவற்றைப் பாா்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள், நிா்வாகம் மற்றும் தொழிலாளா்கள் தரப்பு கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆறு நூற்பாலைகளையும் மேம்படுத்த ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நூற்பாலைகளில் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என்பதை அறிந்துகொள்ள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிா்வாகம், தொழிலாளா்கள் சாா்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள், முதல்வா் கவனத்திற்கு கொண்டு சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது கைத்தறி மற்றும் துணி நூல் துறை செயலா் ஆா். லில்லி, கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குந சுரேஷ்குமாா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷூ மகாஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments