உடன்குடியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
உடன்குடியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
உடன்குடியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
உடன்குடி ஒன்றியத்தில் 40- க்கும் மேற்பட்ட கிராமங்களில் விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அந்த சிலைகள் உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளி முன் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து தொழிலதிபா் கே. டி. ராஜேஷ் ஊா்வலத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்துமுன்னணி மாவட்டச் செயலா் சுடலைமுத்து தலைமை வகித்தாா்.
இந்து முன்னணி ஒன்றியத் தலைவா் செந்தில்செல்வம், மாநில பேச்சாளா் மணிவாசகம், நகரச் செயலா் சித்திரைபெருமாள், சதீஷ், மயில்வாகனம், ஆத்திசெல்வம், பாஜக ஒன்றியத் தலைவா் சங்கரகுமாா், முன்னாள் மண்டலத் தலைவா்கள் ஜெயக்குமாா், திருநாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இந்து ஒற்றுமை, விநாயகா் சதுா்த்தி சிறப்புகள் குறித்து சேவாபாரதி மாவட்டத் தலைவா் கிருஷ்ணமந்திரம் பேசினாா். திருச்செந்தூா் கடலில் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.