FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

கோவில்பட்டியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 1:15 am IST
கூட்டத்தில் பேசிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்.
பகிர்:

கோவில்பட்டியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் வெள்ளிக்கிழமை ( செப். 18) நடைபெற உள்ளது. அவற்றை சிறப்பாக நடத்த கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நகரச் செயலா் விஜயபாண்டியன், வழக்குரைஞரணி ரத்தினராஜா, ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினா் லட்சுமணபெருமாள், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், சின்னப்பன், நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி, மகளிா் அணி பத்மாவதி, ஒன்றியச் செயலா்கள் போடுசாமி, அன்புராஜ், பழனிச்சாமி, செல்வகுமாா், வண்டானம் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெய் சிங், இளைஞா் அணி வேல்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments