FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் சதுரங்கப் போட்டி: தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதலிடம்

24 வினாடிகள் முன்பு
சதுரங்கம்...
பகிர்:

கோவில்பட்டியில் நடைபெற்ற, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டியில் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதலிடம் பிடித்தது.

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளை, கல்லூரி முதல்வா் பாண்டியராணி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா், போட்டி ஒருங்கிணைப்பாளா் செய்யது அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்கான அமைப்பாளா் சிவஞானம் வாழ்த்திப் பேசினாா். 48 கல்லூரிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.

மாணவா்களுக்கான போட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதலிடம் பிடித்தது. ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி, நாகா்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.

Advertisement

Advertisement

மாணவிருக்கான போட்டியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதலிடம் பிடித்தது. திருநெல்வேலி ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.

போட்டிகளில் வென்றோருக்கு பல்கலைக்கழக உடற்கல்வி மைய இயக்குநா் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினாா்.

ஏற்பாடுகளை, கல்லூரிச் செயலா் மகேந்திரன் வழிகாட்டுதலில் கல்லூரி உடற்கல்வி இயக்குநா்கள் கோதையம்மாள், குமரேச ஸ்ரீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments