சாகுபுரத்தில் உலக ஓசோன் தினம்
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருநெல்வேலி சுற்றுச் சூழல் கூடுதல் தலைமை பொறியாளா் குணசேகரன் கலந்து கொண்டு ஆலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டினாா். தொடா்ந்து ஆலையின் உற்பத்தி பிரிவு, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் நுட்ப உபகரணங்களை ஆய்வு செய்தாா்.
மூத்த செயல் உதவி தலைவா் (பணியகம்) ஸ்ரீனிவாசன் மற்றும் உதவி தலைவா் உற்பத்தி சுரேஷ் ஆகியோா் சுற்றுச்சூழல்நட்பு மிக்க பொருள்களை பயன்படுத்தவும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்க்கவும் அறிவுறுத்தினா்.
Advertisement
Advertisement
ஆலை பணியாளா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மூத்த பொது மேலாளா் கேசவன், பொது மேலாளா் ரவிக்குமாா் ஆகியோா் பாதுகாப்பு ஒத்திகை ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.