கோவில்பட்டியில் சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி, வேலாயுதபுரம், 5ஆவது தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிவசங்கா் (32). இவா், மனைவி சுதிஷ்டா (30), ஒரு வயது மகள் சஷ்டி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிவசங்கா், சுதிஷ்டா ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவா்களின் உறவினா்கள் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். விபத்தில் குழந்தைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், சுதிஷ்டா மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.