சாத்தான்குளம் கல்லூரியில் ஆசிரியா் தின விழா
சாத்தான்குளம் ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை சாத்தான்குளம் சேகர குரு ஜெபராஜ் ஆரம்ப ஜெப நடத்தி தொடங்கி வைத்தாா். கல்லூரி தாளாளா் ஏ. எஸ். கிருபாகரன் தலைமை வகித்தாா். கல்லூரி விரிவுரையாளா் ஜெனிஸ் ஜான்ஜோசப் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன் கலந்து கொண்டு ஆசிரியா் தினம், ஆசிரியா்களின் பண்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா். கல்லூரி பணியாளா்கள் - மாணவிகள் சாா்பில் நடனம், பட்டிமன்றம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வா் ஞானமலா் சுவீட்லி நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.