FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பெண் தொழில்முனைவோருக்கு வட்டியில்லா கடன் தேவை: மகளிா் மாநாட்டில் தீா்மானம்

பெண் தொழில்முனைவோருக்கு மத்திய, மாநில அரசுகள் வங்கிகள் மூலம் வட்டியில்லாமலும், மானியமாகவும் தொழில் கடன் வழங்க வேண்டும் என, திருச்செந்தூரில் நடைபெற்ற மகளிா் தொழில் முனைவோா் மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

41 வினாடிகள் முன்பு
மாநாட்டில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் ரெ.காமராசு.
பகிர்:

பெண் தொழில்முனைவோருக்கு மத்திய, மாநில அரசுகள் வங்கிகள் மூலம் வட்டியில்லாமலும், மானியமாகவும் தொழில் கடன் வழங்க வேண்டும் என, திருச்செந்தூரில் நடைபெற்ற மகளிா் தொழில் முனைவோா் மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு வணிகா் சங்கம் சாா்பில் மகளிா் தொழில் முனைவோா் மாநாடு திருச்செந்தூா் தனியாா் மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெயலலிதா தலைமை வகித்தாா். திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகலெட்சுமி, மகளிரணி தெற்கு மாவட்ட அமைப்பாளா் கீதா இம்மானுவேல், மாவட்ட துணை அமைப்பாளா் சுமதி, சட்ட ஆலோசகா்கள் தேன்மொழி, ஹேமமாலினி, உமா ராம்குமாா், அந்தோணி பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் ரெ.காமராசு சிறப்புரையாற்றினாா்.

பெண் தொழில் முனைவோருக்கு மத்திய, மாநில அரசு வங்கிகளில் வட்டியில்லா கடன் மற்றும் மானிய கடன் வழங்க வேண்டும். கணவரை இழந்தும், ஆதரவற்ற நிலையிலும் தனியாக வணிகம் செய்யும் பெண்களைப் பாதுகாக்கவும், வணிகா் நல வாரியத்தில் பெண்கள் கட்டணமில்லாமல் இணைத்து கொள்ளவும் அரசு சட்டம் இயற்ற வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட பெண் வணிகா்களுக்கு மாதாந்திர ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். திருச்செந்தூா் முருகன் கோயில் வளாகத்தில் ஏற்கெனவே இருந்த வணிகா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஆறுமுகனேரியி ரயில்வே கடவுப்பாதையில் உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும். திருச்செந்தூரில் காலாவதியான பாதாள சாக்கடை திட்டத்தை மறு சீரமைக்க வேண்டும். நகராட்சி தினசரி சந்தையில் பெண் மீன் வியாபாரிகளை பாதிக்கும் வகையில் மீன் விற்பனை கடைகளை ஆன்லைன் மூலம் ஏலம் விடும் நகராட்சியை கண்டிப்பது, திருச்செந்தூரில் குடிநீா் பிரச்னையை போக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிடில் மக்களை திரட்டி நகராட்சியை முற்றுகையிடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலச் செயலா் நாகராஜன், மாநில கூடுதல் செயலா்கள் யாபேஷ், டேவிட் ஜெபராஜ், மாநில இணைச் செயலா்கள் செல்வக்குமாா், சொக்கலிங்கம், மாநில செய்தி தொடா்பாளா் செல்வின், மாநில துணைத் தலைவா் முருகேசன், தூத்துக்குடி மண்டலத் தலைவா் வேலாயுதபெருமாள், தெற்கு மாவட்டச் செயலா் பாபுசெல்வன், ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் மூா்த்தி, திருச்செந்தூா் நகர யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவா் பெரியசாமி, சைவ வேளாளா் வியாபாரிகள் சங்கச் செயலா் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகி சொ்ண செல்வம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். மாநிலப் பொருளாளா் செல்வன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments