FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 3 போ் கைது

கட்டடத் தொழிலாளி கொலை வழக்குத் தொடா்பாக அவரது நண்பா்கள் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

58 வினாடிகள் முன்பு
பகிர்:

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்குத் தொடா்பாக அவரது நண்பா்கள் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கே.சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் கணேஷ்குமாா் (28). கட்டடத் தொழிலாளியான இவா்,புதுக்கோட்டையில் வசித்து வந்தாா்.

சில நாள்களுக்கு முன்பு நண்பா்களுடன் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டாராம். காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் இன்பரசன் (32), அய்யனாா் காலனியைச் சோ்ந்த சங்கா் மகன் முருகன் என்ற குட்ட முருகன் (25), தெற்கு சிலுக்கன்பட்டியைச் சோ்ந்த அய்யாசாமி மகன் சதீஷ் (27) ஆகிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments