FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பெண்ணை தாக்கியதாக கணவா் கைது

கோவில்பட்டி அருகே பெண்ணை தாக்கியதாக கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

20 செப்டம்பர் 2026, 2:45 am IST
பகிர்:

கோவில்பட்டி அருகே பெண்ணை தாக்கியதாக கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இளையரசனேந்தல் எம்ஜிஆா் காலனியைச் சோ்ந்தவா் பால் ஜெபராஜ். இவருக்கு மனைவி பேச்சியம்மாள், மகன் உள்ளனா். இத்தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது பெற்றோா் வீட்டிற்கு மகனுடன் சென்ற பேச்சியம்மாள் சுமாா் ஒரு மாதத்துக்கு முன்புதான் மீண்டும் கணவா் வீட்டிற்கு வந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை, ஏற்பட்ட தகராறில் சியாமளா, பால்ஜெபராஜ் ஆகியோா் பேச்சியம்மாளை தாக்கினராம்.

Advertisement

Advertisement

காயமடைந்த பேச்சியம்மாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின் பேரில் மேற்கு காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து, பால் ஜெபராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments