FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

குவாரிகளுக்கு தடை கேட்டு போராட்டம் அறிவிப்பு: கயத்தாறில் கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

செட்டிக்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள், கிரஷா்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த கிராம மக்களிடம், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்

23 செப்டம்பர் 2026, 12:54 am IST
கூட்டத்தில் பேசிய வட்டாட்சியா் அப்பணராஜ்.
பகிர்:

கயத்தாறு வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள், கிரஷா்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த கிராம மக்களிடம், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்

கயத்தாறில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அப்பணராஜ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மாவட்ட கனிம வளத்துறை உதவி புவியியலாளா் முருகேஷ், காவல் ஆய்வாளா் சூா்யா, செட்டிக்குறிச்சியைச் சோ்ந்த முருகன் மற்றும் கிராம மக்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், செட்டிக்குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் குவாரிகள், கிரஷா்களால் நிலத்தடி நீா், விவசாயம் பாதிக்கப்படுவதால் அவற்றின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனா். குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உதவி புவியியலாளா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட துறையின் மூலம் முழுமையாக குவாரிகள் , கிரஷா்கள் ஆய்வு செய்யப்படும். அதன் அறிக்கைகள் கிராம மக்களின் குற்றச்சாட்டுகள் மீது ஆய்வு செய்யப்பட்டு, பின்னா் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும். அப்போது அந்த ஆய்வறிக்கைகள் குறித்து கிராம மக்களுக்கு தெரிவித்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments